6 May 2018

ஏறாவூரில் பொதுச் சந்தையும் வர்த்தக நிலையங்களும் பூட்டு

SHARE
சர்வதேச தொழிலாளர் தினத்தை அனுஷ‪;டிக்கும் முகமாக திங்கட்கிழமை 07.05.2018 ஏறாவூர் பொதுச் சந்தை உட்பட சகல வர்த்தக நிலையங்களையும் மூடி தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்துவதாக ஏறாவூர் வர்த்தக சங்கத்தின் தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் முஹம்மத் இனாயத்துல்லாஹ் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் இம்முறை மேதின விடுமுறை 7ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டதால் எறாவூர் வர்த்தகர்களும் தொழிலாளர்களும் அதனைக் கருத்திற்கொண்டு தமது வர்த்தக நிலையங்களையும் பூட்டி தொழிலாளர்களின் நலன் காக்கத் தீர்மானமெடுத்ததாக அவர் கூறினார்.

இதன்படி ஏறாவூர் நகர பொதுச் சந்தை மற்றும் நகரின் சகல வர்த்தக நிலையங்களும் திங்கட்கிழமை முழுநாள் அளவில் பூட்டப்பட்டிருக்கும். எனினும் செவ்வாய்க்கிழமை வழமைபோன்று வர்த்தக நிலையங்களும் பொதுச் சந்தையும் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: