21 May 2018

தேசிய நல்லிணக்க அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சேவைகள் இன்னும் முற்றாக முடிக்கப்படவில்லை – யோகேஸ்வரன் எம்.பி

SHARE
கடந்த காலத்தில் தேசிய நல்லிணக்க அமைச்சினால் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன ஆனால் அவை இன்னும் முற்றாக முடிக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தின் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை (20) இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனுக்கு விடையங்களை எடுத்துரைத்து பேசுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

தேசி நல்லிணக்க அமைச்சினால் கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 8000 மில்லியன் ரூபா பணம்  வந்தது. அதில் குருமண்வெளி – மண்டூர் பாலம் 1400 மில்லியனிலும், சந்திவெளி - திகிலிவெட்டை பாலம் 1200 மில்லியனிலும், கிரான் - புலிபாய்ந்தகல்பாலம் 1531 மில்லியனிலும், கிண்ணையடி –முருக்கன் தீவு பாலம் 850 மில்லியனிலும், பங்குடாவெளி – நரிப்புல்தோட்டம்பாலம் 650 மில்லியனிலும், றாணமடு – மண்டூர் பலாம் 120 மில்லியனிலும், அமைக்கப்படுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதுபொன்று 3000 மில்லியன் ரூபா மட்டக்களப்பிலிருந்து கல்குமா வலை வீதிகள் புணரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்போதிருந்த நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸமன் கிரியல்ல கலந்து கொண்டு குருமண்வெளி - மண்டூர் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நட்டு வைத்தார் ஆனால் அதன் வேலைகள்  இன்றுவரை ஆரம்பிக்கப்படவில்லை. எனவே இதற்குப் பொறுப்பான அமைச்சர் மனோகணேசன் அவர்கள் இப்பாலங்கள் அமைப்பதற்குரிய வேலைத்திட்டங்களை முன்நெடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 மத மக்களும் வாழ்கின்ற மாவட்டம். இன நல்லிணக்கத்திற்கு மிக முக்கியமான மாவட்டம்.  அந்த வகையிலர் இந்த மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பல அபிவிருத்தித்திட்ட வேலைகள் இருக்கின்றன. வெல்லாவெளிப் பிரதேசத்தில் 2000 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்க்ள வாழ்ந்த பிரதேசம் இது தொல் பொருட் பிரதேசமாக காணப்படுகின்றது. இந்தப் பூர்வீகப் பிரதேசத்தில், பல வேலைத்திட்டங்களை செய்து முடிக்க வேண்டிய தேவைகள் உள்ளன. கடந்த கால யுத்த சூழலில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு மலசல கூட வசதிகள் இல்லை , குடிநீர் வசதிகள் இல்லை, வீட்டுத்திட்டங்கள் போதாதுள்ளது. 

இப்பிரதேசத்தில் யுத்த்தினால் பாதிக்கப்பட்ட அதிக மக்க்ள வர்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழும்ப முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே வாழ்வாதாரத்தைக் கட்டியயெழுப்பப்படல வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சில அமைச்சுக்களிலிருந்து வருகின்ற கடிதங்கள், சிங்கள மொழியில் வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்குக்கூட சில கடிதங்கள் சிங்களத்தில்தான் வருகின்றன. எனவெ இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு வருகின்ற கடிதங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் அனுப்புவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக வேண்டி மத்திய அரசாங்கத்திலிருக்கின்ற அத்தனை அமைச்சுக்களிலும் தமிழர்களை மொழிபெயர்ப்பாளர்களாக நியமிக்கப்படல் வேண்டும். 

மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலாவது இடத்திற்கு நெருங்கி இருக்கின்றோம், ஒரு மாதத்தில் 400 மில்லியன் ரூபா பணத்தை இம்மாவட்டத்திலிருந்து மதுபானத்திற்காக செலவு செய்து வெளியில் அனுப்புகின்றோம். எனவே மதுபாவனையிலும் மட்டக்களப்பு மாவட்டம் முதலிடத்திலுள்ளது. எனவே இவ்வாறான விடையங்களைக் கருத்தில் கொண்டு நாம் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன், அவ்வமைச்சின் பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், உள்ளிட்ட அரச அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது திருமணப்பதிவு, தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், பொலிஸ் நடவடிக்கைகள், உள்ளிட்ட 15 இற்கு மேற்பட்ட சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

SHARE

Author: verified_user

0 Comments: