10 May 2018

வாகரை - பனிச்சங்கேணியில் உள்ள இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மரணம்

SHARE
வாகரை - பனிச்சங்கேணியில் உள்ள இராணுவ முகாமில் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் இராணுவ முகாம் காவலரண் ஒன்றில் காவல் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கந்தளாய் ஜயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.எம். நளீன் சஞ்சீவ (வயது 34 வயது) என்றழைக்கப்படும் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

சிப்பாய் தனக்கு தானே துப்பாக்கிப் பிரயோகம் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இவருடன் இணைந்து செயற்பட்ட ஏனைய சிப்பாய்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் உடற் கூறாய்வுக்காக வாகரை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: