20 May 2018

காணாமல் போனோர் அலுவலகத்தை என்னிடம் வழங்கி இந்த அரசாங்கமும் ஐனாதிபதியும் தப்பிக்க கூடாது.

SHARE
காணாமல் போனோர் அலுவலகத்தை என்னிடம் வழங்கி இந்த அரசாங்கமும் ஐனாதிபதியும் தப்பிக்க கூடாது என்பதற்காவே நான் காணாமல் போனோர் அலுவலகத்தை வேண்டாம் என்றேனே தவிர தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதற்காக வல்ல என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
அட்டக்களப்பு குறுமண்வெளியில் சிக்கனக்கடன் கூட்டுறவுச்சங்கத்தமினால் சனிக்கிழமை (19) நடாத்தப்பட்ட பரிசளிப்புவிழாவில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

நாட்டிலே இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த அமைச்சு தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு எனக்கு தற்போது கிடைத்துள்ள புதிய அமைச்சு தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு முன்னர் இருந்த அமைச்சு தம்பி என்றால் தற்பொழு இருக்கும் அமைச்சு அதன் அண்ணன். குhரணம் ஏற்கனவே இருந்த அமைச்சுக்களை விட தேசிய ஒருமைப்பாட்டை சேர்த்து கொடுத்துள்ளனர். இந்த அமைச்சு ஏற்கனவே இந்த நாட்டின் ஜனாதிபதியின் கையில் இருந்தது. அதனை தற்போது மனோகணேசன்தான் இதற்கு பொருத்தமானவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் என்னிடம் அதனை ஒப்படைத்துள்ளார். இது எனது செயற்பாடுகளுக்கு கிடைத்த சான்றுதழ்.

எந்த நாட்டிலும் இருக்கும் அரசியல்வாதிகள் தங்களிடம் இருக்கும் பதவிகளை எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். முதன் முறையாக ஜனாதிபதி ஒருவர்தன்னிடம் இருந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளார். இதற்குள் காணாமல் போனேர் அலுவலகமும் அவரிடம் இருந்தது அதனைத்தருபோது நான் வேண்டாம் என்று சொன்னேன் என தற்போது ஊடகங்களில் வேறுவிதமாக வெளிவந்து கொண்டு இருக்கின்றது. நிறைய ஊடங்கள் என்னுடன் விளையாடிக்கொண்டு இருக்கின்றார்கள் இந்த விளையாட்டால் அப்பாவி தமிழ் மக்களை தவறான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த நாட்டிலே காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை வடக்கு,கிழக்கிலே  மிகவும் பாரிய பிரச்சினையாக எழுந்துள்ளது. அது எனக்குத் nதிரியும். இந்த பிரச்சினையைப்பற்றி அதிகமாக பல இடங்களில் பேசியவன் மனோகணேசன் மாத்திரந்தான். அதுதான் உண்மை யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டங்களிலே மக்களின் நலனுக்கா மக்கள் காப்hற்றப்பட வேண்டும் என்றதன் அடிப்படையில் போராடியவனும் நான்தான் வேறுயாருமில்லை ஆனால் இன்றைக்கு சங்கிலியன் தோற்றான்,கட்டப்பொம்மன் தோற்றமன்,சேரன் செங்குட்டுவன் தோற்றான் என்று வடக்கு கிழக்கிலே பல போர் உருவாகியுள்ளனர். இவர்கள் எல்லாம் நெருக்கடி நிலையான கால கட்டத்திலே அனைவரும் ஓடி ஒழித்திருந்தனர் நானும் நண்ணபன் ரவிராஜுமே போராடியிருந்தோம் இதுதான் உண்மை.

நாங்கள் போட்ட சத்தம் கூக்குரல்தான் ஐ.நா சபையின் செயலாளர் அவர்களை கொண்டுவந்தது. இதன் அடிப்படையில் ஐ.நா செயலாளருடன் முதன் முதல் இரா.சம்பந்தன் அவர்களுக்கு சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்தது நான் எனவே காணாமல் போனோர் தொடர்பாக எவரும் பாடம் படிப்பிக்கதேவையில்லை காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தினம்தினம் போடும் ஓலங்கள் எல்லாம் எனக்கு நன்றாக nதிரியும் இதனைநான் நேஞ்சிலே பதிந்து வைத்திருக்கின்றேன் இதனை வேறொருவர் செல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இவ்வாறு மிகமுக்கியம் வாய்ந்த இந்த அலுவலகத்தை என்னிடம் தந்துவிட்டு  அரசாங்கம் இந்த நானிருக்கும் அரசாங்கம் தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டடோர் அலுவலகத்தை வேண்டாம் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேனே தவிர வேறு காரணங்கள் ஒன்றுமில்லை. ஆனால் இன்று காணாமல் போனோர் அலுவலகத்தை மனோகணேசன் வேண்டாம் என்று கூறி தமிழ்மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்பது போன்ற செய்திகளைப் பார்க்கின்றேன்.

சிலர் நினைக்கின்றனர் இதனைப்போறுப்பேற்றால் நான் புலனாய்வாளராக மாறி காணாமல் போனோரை கண்டுபிடித்து விடலாம் என்று நினைக்கின்றனர். அவ்வாறு அல்லபிரச்சினை நாட்டின் தலைவரும் அரசாங்கத்தின் தலைவரும்மே இதற்கு பொருத்தமானவர் அவ்வாறு அமைந்தால்தான் இந்த அரசாங்கத்தின் பொறுப்புக்கள் மிகவும் பொறுப்புடன் நடைபெறும், அல்லது நிறைவேறும். அதற்காகத்ததான் ஜனாதிபதி ஒரு அமைச்சரிடம் ஒப்படைத்த பொறுப்பை முதன்முறையாக அமைச்சர் ஒருவர் மீண்டும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கும் நிலைமை ஏற்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: