அடிப்படையில் எந்த விடையத்தையும் நாங்கள் தீர்மானித்து தொடங்கி விட்டாலும் அதனைச் சரியாக மேற்கொண்டு நோயாளர்களுடன் வாழ்ந்து கொண்டே அவற்றை நிறைவேற்றிக் கொள்பவர்கள் தாத்தியர்கள்தான் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட தாத்தியர்களை அதிகளவு கொண்ட வைத்தியசாலையாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை காணப்படுகின்றது.
என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அரச தாத்தி உத்தியோகஸ்த்தர் கிளை ஒழுங்து செய்திருந்த சர்வதேச தாதியர் தின நிகழ்வு சனிக்கிழமை (12) மாலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
அரச தாத்தி உத்தியோகஸ்த்தர் சங்கத்தின் களுவாஞ்சிகுடி கிளையின் தலைவர் தியாகராஜா வித்தியாபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை என் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன், மற்றும் தாத்தியர் சங்க உறுப்பினர்கள், வைத்தியர்கள், உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தாதியர்கள் நைற்றிங்கேளின் உருவ படத்திற்கு விளக்கேற்றி சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதன்போது வைத்திய அத்தியட்சகர சுகுணன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்….
நைற்றிங்கேள் இந்த உலகிக்குச் செய்த சேவைகளும், அற்பணிப்பான கடமைகளும், எங்களுக்கு வெளிப்படையாக விளங்குகின்றன. நைற்றிங்கேள் உருவாக்கியவர்களாகத்தான் தற்போது தாதியர்களெல்லாம் அணிவகுத்து நிற்கின்றார்கள். இதனால் மூலாதாரமாக இருக்கின்ற மனித விழுமியக் கடமையான சுகாதாரச் சேவையில் முக்கிய அங்கத்துவத்தை வகிக்கின்றோம். அந்த அருமையான சுகாதார சேவைக்குள் ஓர் அங்கத்தவர்களாகவுள்ளவர்கள் அனைவரும் பெறுபேறு பெற்றவர்களாவர்.
எமது நோக்கு எமது கடமை, செயற்பாடுகள் அனைத்தும் தேவையானவர்களுக்கு அல்லது நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதாகும். இதில் முக்கியமான பங்கு வகிப்பவர்கள் யார் என்று பார்த்தால், வைத்திய நிபுணர்களோ, வைத்திய அதிகாரிகளோ, அல்ல இதில் முதன்மையானவர்கள் தாத்தியர்கள்தான் என்பத்தில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை.
அடிப்படையில் எந்த விடையத்தையும் நாங்கள் தீர்மானித்து தொடங்கி விட்டாலும் அதனைச் சரியாக மேற்கொண்டு நோயாளர்களுடன் வாழ்ந்து கொண்டே அவற்றை நிறைவேற்றிக் கொள்பவர்கள் தாத்தியர்கள்தான் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட தாத்தியர்களை அதிகளவு கொண்ட வைத்தியசாலையாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை காணப்படுகின்றது.
நீயா நானா என்ற போட்டி, உனக்கா எனக்கா என்ற போட்டி, நீ பெரியவன் நான் பெரியவன் என்ற போட்டி, அல்லது நீ சிறந்தவன் நான் சிறந்தவன் என்ற போட்டி, இவ்வாறு பல முhண்பாடுகள் ஏற்படுவதனால்தான் ஆரோக்கியமான அமைத்தியான செயற்பாடுகளுக்குத் தடங்கலாக அமைகின்றன. ஆனால் இவ்வாறான எதுவித முரண்பாடுகளையும், எனது 20 வருடகால அனுபவத்தில் இந்தக் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நான் கண்டது மிக மிகக் குறைவாகும். அதுவும் ஒரு தலைமை நிருவாகிய இருந்து கொண்டு அந்த விடையத்தை நான் அதிகளவு அனுபவதிருக்க வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு எதுவித முரண்பாடுகளையும் நான் அனுபவிக்க வில்லை. அந்த வகையில் எமது உத்தியோகஸ்த்தர்கள், அதிகாரிகள் அனைவரும் ஒரு கூட்டுறவுடன் செயற்படுகின்றார்கள். இதனால்தான எமது வைத்தியசாலை நோயளர் சேவையில் முதன்மையான இடத்தில் இருக்கின்றது. என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment