இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் காத்தான்குடியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் சித்தியடைந்துள்ளார்.
காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தில் கடமை புரியும் எம். முஹம்மத் கலாவுதீன் இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் அதிபர் சேவை முதலாம் வகுப்பிற்கு சித்தியடைந்துள்ளார்.
இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்து பதவி உயர்வு பெறுவோருக்கான பதவி உயர்வுக் கடிதம் வழங்கும் வைபவமும் அறிவுறுத்தல் செயலமர்வும் கல்வியமைச்சில் எதிர்வரும் 23ஆம் திகதி (23.04.2018) திங்கட்கிழமை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்து அழைப்புக் கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளது.
இம்முறை நாடளாவிய ரீதியில் இருந்து இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சைக்கு தோற்றிய சுமார் 3000 பேரில் 263 பேரே தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அதேவேளை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி கல்விக் கோட்டங்களில் இருந்து 9 பேர் இலங்கைக் கல்வி நிருவாக சேவைப் பரீட்சைக்குத் தோற்றயிருந்தனர். அவர்களில் ஓரேயொருவரே சித்தியடைந்து பதவி உயர்வைப் பெறுகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment