மட்டக்களப்பு சிறைக் கைதிகளின் நலன் கருதி தமிழ் - சிங்கள புதுவருட விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை 22.04.2018 நடைபெற்றது.
சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றன. இதில் சிறைக் கைதிகளான ஆண்களும் பெண்களும் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யூ.எச். அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி கே.ஈ. கருணாகரன், செயலாளர் வி.ஈ. தர்ஷன், சிறைச்சாலை அதிகாரிகள், சமூக சேவையாளர்கள், நலன் விரும்பிகள், சிறைக் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment