மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் சித்திரைப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு விஷேட பிரார்த்தனையும் கலை நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (15ஆம் திகதி) மாலை பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சிறந்ததொரு உலகை உருவாக்குதல் எனும் அபிலாஷையின் அங்கமாக இந்த ஆண்மீக பணி பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் அனுசரணையுடன் சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
இந் நிகழ்வில் ஆசிய பசுபிக் பிராந்திய பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் பொறுப்பாளரும் கியான் சரோவரின் பணிப்பாளருமான டாக்டர். நிர்மலா கஜாரியா கலந்துகொண்டு ஆண்மீக உரையினை வழங்கினார்.
இன்றைய நிகழ்வில் ஆண்மீன உரைஇ தியானம்இ பட்டிமன்றம்இ நடனம்இ பாடல் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்இ மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் உள்ளிட்ட அரச திணைக்கள் அதிகாரிகள்இ தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் இதன்போாது கிழக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்த பொது மக்களும் வருகைதந்து கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment