28 Apr 2018

மட்டு. மாவட்டத்திற்கு ஐநா.வின் உதவிக்கான தேவைகள் குறித்து ஆராயவென அதன் அதிகாரி களவிஜயம்.

SHARE
கிழக்குக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு (UN - DOCOநடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் கனி விக்னராஜா வெள்ளிக்கிழமை (27) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், மாவட்டத்தின் தேவைகள், கடந்தகாலத் திட்டங்களையும் பார்வையிட்டார். 
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள், தேவைகள் தொடர்பில் ஆராய்தல் மற்றும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திதிட்டங்களைப் பார்வையிடல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வருகை அமைந்திருந்தது. 

உலக உணவு ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி சி.நீனா, யுனிசெவ் இன் இலங்கைக்கான உதவிப்பணிப்பாளர் பவுலா ஆகியோரும் இணைந்திருந்தனர். 

வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு ( UN - DOCO)   நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் கனி விக்னராஜா தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதே செயலகத்தில் மேறகொள்ளப்பட்டுள்ள இலத்திரனியல் வாடிக்கையாளர் சேவை நிலையம், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை,  மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள தர்மபுரம் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் ஆகியவற்றினையும் பார்வையிட்டனர். 

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள சவால்கள், வேலையில்லாப் பிரச்சினை வறுமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதான விளக்கமளிப்பொன்றினை மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் வழங்கினார். 

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் மாவட்டத்திற்குக்கிடக்கப்பெற்ற உதவிகள், தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. 

இக் கலந்துரையாடலிலன் போது, பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஜெயரஞ்சினி கணேசமூர்த்தி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் மட்டக்க்ளப்பு மாவட்ட திட்ட நிபுணர் கே.பார்த்தீபன், யுனசெப் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக பிரதான றெபின்சியா பீற்றர்சன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: