1 Apr 2018

தமிழ் கட்சிகளிடமிருந்த முரண்பாடுகள் காரணமாக தேசியக் கட்சிகள் பலமடைந்திருக்கின்றன.

SHARE
தமிழ் கட்சிகளிடமிருந்த முரண்பாடுகள் காரணமாக தேசியக் கட்சிகள் பலமடைந்திருக்கின்றன. இந்நடவடிக்கையால் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் பலவீனமடைவார்கள். உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டு ஆட்சியைக் கொண்டு வந்து கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழ் முதலமைச்சரைக் கொண்டு வருவதற்காகவும் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும். என்ற செய்தியை எமது மக்கள் செய்து செய்தி சொல்லியிருக்கின்றார்கள்.
என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப் பற்று பிரதேச சபைக்கு கிராங்குளம் கிராமத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் திருமதி.கு.சுந்தராம்பாளின் சத்தியப்பிரமாண நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை (30) கிராங்குளம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
 
கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலின்போது ஒரு வட்டாரத்தில் மாத்திரம் 18 லெட்சம் ரூபாய் செலவு செய்து மதுப்போத்தல்களைக் கொடுத்து வாக்குக் கேட்ட சரித்திரமும் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. ஒட்டு மொத்தத்தில் இந்த தேர்தல் சில இடங்களில் ஆட்களுக்கும், சில இடங்களில் சின்னத்திற்கும், சில இடங்களில் சாதிக்கும் வாக்களித்துள்ளார்கள். இவ்வாறான விடையங்கள் விவாதிக்கப்பட வேண்டி விடையங்களாகும்.

இதுவரைகாலமும்  எந்தவித சமூக சேவைகளும் செய்யாமல் இருந்துவிட்டு போரினவாதக் கட்சியில் தேர்தலில் இறக்கி ஒரு வட்டாரத்தில் மாத்திரம் 18 லெட்சம் ரூபாய் செலவு செய்து வெற்றிபெறுவதென்பதை சமூகத்தின் தவறா ஏனைய கட்சிகளின் தவறா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இவற்றைவிட 312 வாக்குகளைப் பெற்ற ஒரவர் 9 லெட்சம் மூபாய் செலவு செய்த சரித்திரமும் நடைபெற்றுள்ளது. எனவே கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் பிரதேச வாதம், தெருச்சண்டை, பிதேச சண்டை, சாதிச்சண்டை, உள்ளிட்ட விடையஙகள்ளை உள்ளடக்கி முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளன. இவையும் விவாதிக்கப்பட வேண்டிய விடையமாகும்.

தற்போது தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவுகளிலும் பல பிரச்சனைகள் இடம்பெறுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஈ.பி.டி.பியும் சேர்ந்து ஆட்சியமைப்பதென்பது எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி எக்காரணம் கொண்டும் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம்.

இந்த தேர்தலைப் பெறுத்தவரையில் விரும்பியோ விரும்பாமலோ பல நன்மையான விடையங்களும் நடைபெற்றிருக்கின்றன. பல தமிழ் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சிலர் கௌரவப் பிரச்சனையால் கட்சிகளுடன் சுடிக்கதைக்காமல் பேசாமல் இருக்கின்றார்கள்.

தமிழ் தேசிக் கூட்டமைப்புக்கும், சூரியன் சின்னத்திற்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரதேசம் மட்டம், மாவட்ட மட்டத்திலும், தேசிய கட்சிகள் வளர்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 120,000 இற்கு மேற்பட்ட தமிழ் வாக்குகள் அளிக்கப்படவில்லை, இதனால் எதிர்வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் 2 தமிழ் உறுப்பினர்களை இல்லாமல் செய்யும் நிலை ஏற்பட்டள்ளதா எனவும் எண்ணத் தோணுகின்றது.

தேர்தலுக்கு முன்னர் எம்முடன் கதைக்காதவர்கள், தற்போது எமது அங்கத்தவர்களுடன் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பான்மையான ஆசனங்களை யார் வைத்துள்ளார்களோ அவர்கள்தான் சபைகளில் ஆட்சியமைக்க வேண்டும் என்பது சரித்திரம். இவற்றைவிடுத்து ஒருசில அங்கத்தவர்களை  வைத்துள்ள கட்சிகள் ஆட்சியமைக்க முன்படுகின்றனர் அவ்வாறு முற்பட்டால் அங்கு பணம் கையாளப்படும், மோசடிகளும் இடம்பெறும்.  இரண்டு, மூன்று பேர்களை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க முன்பட்டால் எதிர்காலத்தில் நல்லாட்சி இல்லாமல் ஊழல் செய்வதற்கு வழிவகுக்கும். எனவே உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள பெரும்பான்மை அங்கத்தவர்களைக் கொண்டுள்ள கட்சிக்கு எமது கட்சி ஆதரவு வளங்கும்.

தமிழ் கட்சிகளிடமிருந்த முரண்பாடுகள் காரணமாக தேசியக் கட்சிகள் பலமடைந்திருக்கின்றன. இந்நடவடிக்கையால் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் பலவீனமடைவார்கள். உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டு ஆட்சியைக் கொண்டு வந்து கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழ் முதலமைச்சரைக் கொண்டு வருவதங்காகவும் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும். என்ற செய்தியை எமது மக்கள் செய்து செய்தி சொல்லியிருக்கின்றார்கள். என அவர் தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: