களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 60 வது ஆண்டையும், சித்திரைப் புத்தாண்டையும் முன்னிட்டு நடாத்தப்பட்ட கலாசார விளையாட்டு விழா.மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 60 வது ஆண்டு நிறைவையும், சித்திரைப் புத்தாண்டையும் முன்னிட்டு உள்ளுர் பொது அமைப்புக்கள், மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் 60 வது கலாசார விளையாட்டு விழா ஞாயிற்றுக் கிழமை (15) மாலை களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கழகத் தலைவர் சோ.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். மேலும் இதன் போது உதவிக் காணி ஆணையாளர் கு.பிரணவன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கணக்காளர் ஆர்.கார்த்திகேசு, வைத்தியர் வி.இளங்கோ மற்றும் கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்விளையாட்டு விழாவில் வழுக்குமரம் ஏறுதல், தலையணைச் சமர், கிடுகு பின்னுதல், கயிறு இழுத்தல், மரதன் ஓட்டம், முட்டைமாற்றுதல், உள்ளிட்ட பல கலாசார விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெறுமதியான பரிசில்களும், வெற்றிக் கேடையங்களும், காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment