45 வருடங்களாக தவிசாளர் பதவிக்காக காத்திருக்கும் களுதாவளை மக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அதிக வாக்காளர்களைக் கொண்ட பழம் பெரும் கிராமம் களுதாவளையாகும். இது கிராமம் இல்லை நகரம் என்று தற்போதைய அரசாங்க அதிபர் அண்மையில் களுதாவளை மகா வித்தியாலய விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது கூறியிருந்தார்.
கல்வி, விவசாயம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் மிகப் பிரபலமான இந்த களுதாவளைக் கிராமத்திற்கு அரசியல் தலைவர் உருவாவதில் தான் பல சிக்கல்கள் நிலவுகின்றன. இதற்கு காரணம் அந்தக் கிராமம் அதிகமான வாக்காளர்களைக் கொண்டிருப்பதால் எல்லா அரசியல் வாதிகளுக்கும் இக்கிராமத்தில் கண்வைத்துச் செயற்படுகின்றார்கள்.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்கிராமத்திலுள்ள 2 வட்டாரங்களிலும் அமோக வெற்றி பெற்று 20 வீத மான உறுப்பினர்களை தெரிவுசெய்து இக்கிராம மக்கள் தெரிவு செய்து கொடுத்துள்ளார்கள்.
இது இவ்வாறு இருக்க மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு இக்கிராமத்தைச் சேர்ந்தவர் தவிசாளர் பதவியைப் பெறுவதற்கான இந்நிலையில் இதனை தடுப்பதற்கு ஒரு சிலர் செயற்படுவது கவலையாக உள்ளதாக களுதாவளைக் கிராமமக்கள் ஆதங்கப் படுவதாக அக்கிராமத்து பெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.
பல சவால்களுக்கு மத்தியிலும் தமது கிராமத்திலுள்ள இரண்டு வட்டாரங்களைக் கைப்பற்றிய களுதாவளை கிராமத்துக்கு அயல் கிராமங்களைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவு நல்கவேண்டும் என வேண்டுவதோடு, இது தவறும் பட்சத்தில் மாற்றுக் கட்சியினர் மீண்டும் களுதாவளை கிராமத்தில் வேர் ஊன்றுவதற்கு சந்தர்ப்பமாய் அமைந்து விடும் எனவும் அக் கிராமத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment