இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு விழா புதன்கிழமை (14) காலை 09.30 மணியளவில் மட்டக்களப்பு மாநகரசபை நகர மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராசசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், மற்றும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், இ.பிரசன்னா, இ.இராஜேஸ்வரன், த.கலையரசன், மற்றும், உள்ளுராட்சி மன்றங்களில் வெற்றியீட்டிய அங்கத்தவர்கள், பொதுமக்கள், கட்சியின் ஆதரசாளர்கள் உறுப்பினர்கள் எபலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மும்மதத் தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பத்திரிகையின் வெளியீட்டு உரையினை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராசசிங்கம் நிகழ்த்தினார். பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசாவினால் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு பத்திரிகைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் உருவாக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகை நாட்டின் அசாதாரண நிலை காரணமாக வெளிவராத நிலையில் தற்போது அது புதிய பரிணாமத்தில் புதிய சுதந்திரன் எனும் பெயரில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment