பாதுகாப்பாக வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் டயர் மற்றும் பெற்றரி உட்பட உதிரிப்பாகங்கள் திருடப்பட்டுள்ளதான முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, பஸ்ஸின் உரிமையாளர் வழமை போன்று தனது பஸ்ஸை வீட்டின் முன்னால் நிறுத்தி வைத்துள்ளார்.
பின்னர் அதன் சேவைக்காக பஸ்ஸைப் பார்த்தபொழுது ஸ்டார்ட் செய்ய முடியாமல் இருந்துள்ளது.
பஸ்ஸைப் பரிசோதித்தபோது பஸ்ஸில் இருந்த பெற்றரி மற்றும் மேலதிக டயர் (Spare
wheel) என்பன திருடப்பட்டுள்ளன.
இது குறித்து உடனடியாக வியாழக்கிழமை 01.03.2018 எறாவூர் பொலிஸாருக்கு முறையிடப்பட்டதோடு சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையிலான பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment