சத்தியயுகம் எனும் முழு நீளத் திரைப்படம் வெளியீட்டு விழா சனிக்கிழமை (24) மாலை மட்.தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. த.விமலநாதனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சி.அமலநாதன், நிதியமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மூ.கோபாலரெத்தினம், கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன், கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார முன்னாள் கலாசார பீடாதிபதி க.இராஜேந்திரம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் மற்றும், கலைஞர்கள், அரச அதிகாரிகள், கிராம பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் இளைஞர்கள் அவ்வப்போது குறுந்திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகின்ற இந்நிலையில் நாட்டுக்கூத்து, நாடகம், கவிதை, கட்டுரை, பாடல், கோலாட்டம், கும்மி, என பல கிராமியக் கலைகளை தன்னகத்தே கொண்டு வளர்த்துவரும் தேத்தாத்தீவுக்கிராமத்தின் கலைஞன் மற்றும் ஓர் ஆசிரியராகவும் இருந்து கொண்டு ஒரு முழு நீளத் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியும் நடித்துமுள்ளார் அ.ஈழவேந்தன் என்பவர்.
விவசாயம், விஞ்ஞானம், எதிர் காலத்தில் விவசாயத்தில் சாதிக்க வேண்டிய விடையங்கள், உள்ளிட்ட சிந்தனையைத் தூண்டக் கூடிய வித்தில் இத்திரைப்டத்தை தாயாரித்துள்ளார் அ.ஈழவேந்தன்.
ஈழவேந்தனின் இந்த முயற்சி எதிர்காலய இளைஞர் யுவதிகளுக்கு ஓர சிந்த எடுத்துக்காட்டாக அமையும், கிராமியக் கலைத்துறையில் மிளிர்கின்ற இக்கிராமம் இன்றிலிருந்து திரைப்படத்துறையிலும் மிளிர்கின்றது. என இதில் கலந்து கொண்ட பலரும் கருத்து தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment