19 Mar 2018

ஆலய தர்மகத்தாக்கள் ஆலயங்களுக்கு உதவி செய்யுமாறுதான் அதிகம் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.

SHARE
இந்து மதத்தவர்களான ஆயல தர்மகத்தாக்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் சென்று ஆலயங்களுக்கு உதவி செய்யுமாறுமாதான் அதிகம் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.  என்னைப் பெறுத்தவரையில் எனது மாகாண சபை பதவிக்காலத்தில் ஆலங்களுக்கு உதவி செய்தது மிகக் குறைவு, எனது உதவிகளில் பெரும்பாலானவை கல்வி, வாழ்வாதாரம்,  போன்றவற்றிற்குத்தான் மேற்கொண்டிருந்தேன்.  
என முன்னாள் கிழக்கு மாகாண வபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.

கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையினால் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள செல்லிக்காடு பாலர் பாடசாலைக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம் ஞாயிற்றுக் கிழமை (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேற்படி சபையின் தலைவர் த.துஷியந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் த.வசந்தராசா, கொள்கைத் திட்டமிடல் அமைச்சின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன், போரதீவுப்பற்றுப் பிரதேச முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ப.கமல்ராஜ், போரதீவுப்பற்றுப் பிரதேச சிவில் அமைப்பின் தலைர் வ.சக்திவேல், மற்றும் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சபையின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் மா.நடராசா மேலும் தெரிவிக்கையில்….  
 
அனைத்த மதங்களும் மனிதர்களை நல்வழிப் படுத்துவதற்காகத்தான் இருக்கின்றன. மனிதர்கள் நல்வழியில் பயணிக்கவேண்டும் என்பதற்காகத்தான் மதங்கள் உருவாக்கப்பட்டு அம்மதங்களினூடாக நற்போதனைகள் வழங்கப்படுகின்றன. பல மதங்கள் ரீதியாக மனிதர்கள் ஒழுகி வந்தலும் இறுதியில் அனைவரும் இறைவன் எனும் ஓரிடத்தித்தால் சங்கமிக்கின்றார்கள்.  அந்த இறை சக்தியைத்தான் மனிதர்கள் வழிட்டு வருகின்றார்கள். இந்த இறை சக்தி அனைத்து மதங்களிலும் இருக்கின்றன.

இந்நிலையில் நமது இந்து மதத்தவர்களான ஆயல தர்மகத்தாக்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் சென்று ஆலயங்களுக்கு உதவி செய்யுமாறுமாதான் அதிகம் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.  என்னைப் பெறுத்தவரையில் எனது மாகாண சபை பதவிக்காலத்தில் ஆலங்களுக்கு உதவி செய்தது மிகக் குறைவு, எனது உதவிகளில் பெரும்பாலானவை கல்வி, வாழ்வாதாரம்,  போன்றவற்றிற்குத்தான் மேற்கொண்டிருந்தேன். தற்போதைய காலகட்டத்தில் கல்விக்குத்தான் முன்னுரிமை கொடுத்து எமது மாணவர்களை உயர்த்திவிட வேண்டும். கடந்த யுத்த காலத்தில் தமிழ் மக்கள் கல்வி வளர்ச்சியில் பின்தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால் இச்சந்தர்ப்பத்தில் கல்வி, பொருளாதாரம், போன்ற பல வற்றில் ஏனைய சமூகத்தினர் முன்னேறிக் கொண்டு செல்கின்றனர். இவற்றுக்கு ஈடு செய்யும் வகையில் எமது மாணவர்களின் கல்வியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.இன்றய சிறுவர்களின் எதிர்காலத்தை உயர்த்துகின்ற பலமான அத்திவாரம்தான் பாலவர் பாடசாலையாகும். பாலர் பாடசாலை ஆசிரியைகள், அப்பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதேவேளை, தாயாகவும் செயற்பட்டு சிறுவர்களை வழிப்படுத்துகின்றார்கள். இவ்வாறான ஆசிரியைகளை எமது சமூகம் பாராட்டுவதற்கு தவறவிடக் கூடாது. 

கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களில் பலர் தற்போது கல்வி கற்று உயர் பட்டங்களைப் பெற்று, பல திணைக்களங்களிலும், ஏனைய இடங்களிலும் உயர் பதவிகளை வகிக்கின்றார்கள். எனவே எமது கிராமப்புறச் சிறார்களை நாளைய தலைவர்களாக திகழ்வதற்கு அனைவரும் கைகோர்த்து செயற்படுவோம் என தெரிவித்தார்.













SHARE

Author: verified_user

0 Comments: