19 Mar 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமான நிகழ்வு…

SHARE
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமான நிகழ்வு நாளை காலை 09.00 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மற்றும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமான நிகழ்வு வடக்கு கிழக்கு பூராகவும் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கான நிகழ்வு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் 27 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: