மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தென்றல் சஞ்சிகையினால் கலாபூசணம் கலைச் செம்மல் மு.தம்பிப்பிள்ளை எழுதிய வாழப்பிறந்தவள் எனும் சிறுகதை மற்றும், புதுமைப் பெண் சுதந்திரப் பறவைகள் எனும் நாவல், ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமை (10) களுவாஞ்சிகுடியில் அமைந்துள் சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், மட்டக்களப்பு சிரேஸ்ட்ட சட்டத்தரணி எஸ்.சிவநாதன், பட்டிருப்பு பிரதிக் கல்விப் பணிப்பாளர் கி.ஜெயந்திமாலா, கிழக்குப் பல்கலைக் கழக சமய வளத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.மதிசீலன், முன்னாள் காதி நீதிபதியும், தேசமானிய பன்னூலாசிரியரும் ஓய்வு பெற்ற அதிபருமான எம்.எம்.மவ்றூப் கரீம், உள்ளிட்ட எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், சமத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நூலின் முதற் பிரதியை நூலாசிரியரிடமிருந்து மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் பொருளாளர் புரவலர் வி.ரஞ்சிதமூர்தி பெற்றுக் கொண்டார்.
வாழப்பிறந்தவள் எனும் சிறுகதை நூலின் நயவுரையை கவிஞர் அரசரெத்தினமும், புதுமைப்பெண் சுதந்திரப் பறவைகள் எனும் நாவலின் நயவுரையை கவிஞர் ஆழிவேந்தன் ரமேஸ்குமாரும் நிகழ்த்தினர்.
மேலும் இதன்போது கலந்த கொண்ட அதிதிகள் இலக்கிய உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment