மட்டக்களப்பு மாவட்டம் கண்ணபுரம் 35 ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய தங்கராசா மகேஸ்வரன் என்பவர் புதன்கிழமை (21.03.2018) அதிகாலை மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது
தமது கால்நடைகளை மேய்த்து வருவதற்காக 35ஆம் கிராமத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோணகல 32ஆம் கிராமப் பகுதிக்கு இவர் புதன்கிழமை அதிகாலை சென்றுள்ளார்.
அவ்வேளையில் அங்கு சட்டவிரோதமான முறையில் வேலிகளில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரத்தினால் தாக்கப்பட்டு ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விடயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உஹன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
32 ஆம் கிராமம், கோணகல பகுதியில் பெரும்பான்மை இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அப்பகுதி காடுசார்ந்த பகுதியாகக் காணப்படுவதனால் பெரும்பாலான பண்ணையாளர்களின் கால்நடைகள் மேய்த்து வருவது வழமை.
குறித்த கோணகல பகுதியில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள சமூக பண்ணையாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் சமூக பண்ணையாளர்களும் கோணகல பகுதியை மாடு மேய்ப்பிற்காக பயன்படுத்தி வருவதாக உள்ளுர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை தமது கால்நடைகளை சாய்க்கச் சென்ற பண்ணையாளர் மின்னிணைப்பில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த மின்னிணைப்பு, வேலிகளில் சட்டவிரோதமான முறையில் பாய்ச்சப்பட்டிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment