அருள்மொழியரசு, தமிழ் மொழியரசு வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அம்மாவர்களுடைய ஆத்மா இறையடிசேர பிரார்த்திப்பதோடு, அருள்மொழியரசு வசந்தா வைத்தியநாதன் அம்மாவினுடைய மறைவுச் செய்தி கேட்டு, இலங்கை சைவ மக்கள் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் சைவ மக்கள் அனைவரும் ஆழ்ந்த வேதனையுடன் இருக்கின்ற இத்தருணத்தில் அம்மையாரின் இழப்பு சைவ உலகிற்கு ஈடுசெய்யமுடியாதொன்று என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலை முதல்வர் ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவச்சாரியார் தனது இரங்கல் உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அருள்மொழியரசு, தமிழ் மொழியரசு வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அம்மையார் அவர்களைப் பற்றி அவர் தெரிவிக்கையில்
வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அம்மணியவர்கள் ஆழ்ந்த தமிழ் அறிவும், இலக்கிய அறிவும், சமஸ்கிருத அறிவும் கொண்ட ஒரு பெருமைக்குரியவர். பல்வேறு ஆலய நிகழ்வுகள் கும்பாவிஷேகங்கள், மகோற்சவங்களிலே நேர்முக வர்ணனை செய்கின்றபொழுது அழகிய தமிழும் அவர்களுடைய கம்பீரமான கனீர் என்ற குரலும் எவராலும் மறக்கமுடியாது.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அறிஞர்கள் முதல் பாமர மக்கள் வரையிலும் புரிகின்ற வகையிலே அழகிய தமிழிலே கனீர் என்று பேசுகின்ற சிறப்பு கொண்டவர். கனீர் என்ற குரல் எவராலும் மறக்கமுடியாது.
அம்மையாரின் பிரிவு சைவ உலகத்திற்கு ஈடு செய்யமுடியாது. அன்னையின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலே பிறந்து தமிழகத்திலே படித்து தமிழகத்திலே வளர்ந்து திருவாவுடை ஆதீனத்தில் வித்துவான் பட்டம் பெற்று இலங்கைத் திருநாட்டிற்கு வருகைதந்து திருமணம் செய்து, தன்னுடைய வாழ்நாளில் இறை பணிக்காக அர்ப்பணித்தவர்கள் வித்துவான் வசந்தா அம்மையார் அவர்கள்.
வாழ் நாளில் அம்மையார் அன்பாகவும் பன்பாகவும் பணிவாகவும் நடந்துகொள்ளக்கூடியவர்கள். எப்பொழுதும் சமூக நலன் கருதி சிந்தனை கொண்டவர்களாக வாழ்ந்தவர்கள்.
அருள்மொழியரசு வசந்தா வைத்தியநாதன் அம்மையார் அவர்கள் இலங்கை வானொலியில் காலை வேளையிலே சைவ நற்சிந்தனை சிந்தனை போன்ற நிகழ்வுகளிலும் பல்வேறு தத்துவாத்த நிகழ்வுகளிலும் அருமையான கருத்துக்களைக் கூறக்கூடியவர்கள்.
பல நிகழ்வுகளில் சமய நிகழ்வுகள், இலக்கிய நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளில் கலந்து ஆழமான தத்துவாத்துவங்களை எல்லாம் எடுத்துக்கூறியவர்கள்.
எமது அகில இலங்கை சபரிமலை சாஸ்த்த பீடத்தின் சபரிமலை ஐயப்ப சுவாமி மகரஜோதி பெருவிழாக்களில் நடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே அவ்வாறான நிகழ்வுகளுக்கு வந்து கலந்துகொண்டவர்கள்.
பல்வேறு வகையான சமய தத்துவங்களை ஊடகங்கள் மூலமாகவும் வழங்கி வந்த அம்மையார், இலங்கை இந்துமா மன்றம், இலங்கை கம்பன் கழகம், விவேகாந்தா சபையிலும் ஆலலோகராக இந்து சமய கலாசார அமைச்சிலும் ஆலோசகராக பல பணிகளை ஆற்றியவர்கள்.
அவர்களுடைய பிரிவு சைவ உலகிற்கு ஈடு செய்யமுடியாது. அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடியில் ஆறுதலடைய சர்வதேச இந்து மத குருபீடத்தின் சார்பில் நாமும் பிரார்த்தனை செய்து அன்னாரின் பிரிவால் துயர்கொள்ளும் அனைத்து உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வித்துவான் வசந்தா அம்மையார் அவர்களினுடைய ஆத்மா சாந்தியடைய சர்வதேச இந்துமத குருபீடத்திக் சார்பில் இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி, ஓம் சர்ந்தி.
0 Comments:
Post a Comment