கிண்ணியா, மணலாற்றில் இருந்து 17 வயதான இளைஞனின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை கிண்ணியா மகாவலி ஆற்றுப் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வைப் பரிசோதனை செய்வதற்காக பொலிஸார் சுற்றி வளைப்பொன்றை மேற்கொண்டிருந்தபோது சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சிலர் தப்பியோட இந்த இளைஞர் ஆற்றில் குதித்திருந்தார்.
ஆற்றில் குதித்த கிண்ணியா, பைஸல் நகரைச் சேர்ந்த எம். ரணீஸ் (வயது 17) எனும் இளைஞன் செவ்வாய்க்கிழமையிலிருந்து தேடப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை காலை அவரது சடலம் மீட்கப்பட்டதென பொலிஸார் தெரிவித்தனர்.
ஆற்றில் குதித்தவரைக் காப்பாற்றிக் கரைசேர்ப்பதற்கென கடற்படையினரின் உதவி உடனடியாக நாடப்பட்டிருந்தது. கடற்படையினர், மீனவர்கள், பொலிஸார், பொதுமக்கள் என எல்லோரும் களத்தில் இறங்கினர்.
சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்காக பொலிஸார் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சுற்றி வளைப்பில் தப்பியோடியோர் போக மேலும் 4 பேரைப் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீரில் மூழ்கி மரணித்தவரின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சட்ட விரோத மணல் அகழ்வு, ஆற்றில் குதித்து மரணித்தமை, மற்றும் தப்பியோடியமை பற்றி பொலிஸார் இப்பொழுது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment