திங்கட்கிழமை காலை 19.03.2018 ஏறாவூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அநாமதேயமாகக் காணப்பட்ட பொதியொன்றிலிருந்து சுமார் மூன்றரைக் கிலோ கிராம் கேரளக் கஞ்சாவும் கஞ்சாவை நிறுத்து விற்பதற்குப் பயன்படுத்தும் இலத்திரனியல் தராசும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், தைக்காவீதியை அண்டியுள்ள வீட்டு மதிலோரம் இந்த அநாமதேயப் பொதி காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ;ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தலைமையிலான பொலிஸ் அணி ஸ்தலத்திற்கு விரைந்து சென்று இந்தக் கஞ்சாப் பொதியை மீட்டனர்.
உள்ளுர் சந்தைப் பெறுமதியில் கைப்பற்றப்பட்ட இந்தக் கஞ்சா ரூபாய் 10 இலட்சம் பெறுமதியானது என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment