மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிராங்குளத்தில் சற்றுமுன்னர் வியாழக்கிழமை இரவு (29) இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது….
கல்முனை பகுதியிலிருந்து லொறி ஒன்று சென்றுள்ளது இந்நிலையில் மட்டக்களப்பு பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் எதிரே வந்துள்ளது. இந்நிலையில் இரண்டு வாகனங்களுக்குமிடையில் தீடீரென மாடு ஒன்று குறுக்கீடு செய்துள்ளதனால் லொறியும் மோட்டார் சைக்கிளும் எதிரெத்திரே பலமாக மோதிக் கொண்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி மாவட்ட வைவத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படுகாயமடைந்த இளைஞன் மல்வத்தையைச் சேர்ந்த 17 வயதுடைய ரதன் ஜனோஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதி முற்றாக சேதடைந்துள்ளதுடன் லெறியின் முன்பகுதியும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு குறுக்கீடு செய்த மாட்டுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து சம்பவத்தில் சற்று நேரத்தில் அவ்விடத்தில் போக்குவரத்து இஸ்த்தம்பிதம் அடைந்துகாணப்பட்டது. பின்னர் அவ்விடத்தில் கூடிய இளைஞர்கள் போக்குவரத்த்தினைச் சீர் செய்தனர்.
0 Comments:
Post a Comment