29 Mar 2018

மலைநாட்டு மரக்கறி வகைகளையும் உற்பத்தி செய்வதில் களுதாவளை விவசாயிகள் ஆர்வம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிலை, மிளகாய், கத்தரி, வெங்காயம், வெண்டி, உள்ளிட்ட, பலவகையான மேட்டுநில விவசாயச் செய்கைக்குப் பெயர்போன கிராமமாகக் காணப்படுவது களுதாவளைக் கிராமமாகும். 
கடற்கரை அண்டிய கரையோரத்தை பதிகளில் மாட்டொரு உள்ளிட்ட இயற்கை மற்றும் செயற்கை உரவகைகளைகளையும் பயன்படுத்தி பரைம்பரை பரம்பரையாக பன்னெடுங்காலமாக அக்கிராம மக்ககள் மேட்டுநில விவசாயச் செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களில் சிலர் மலை நாட்டுப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்படும் மரக்கறிவகைகளான கோவா, கரட், போஞ்சி, நோக்குட், உள்ளிட்ட பயிர்களையும், பரிட்சாத்தமாக மேற்கொண்டுள்ளனர். 

தாம் இதுவரையில் செய்து வந்த மரக்கறிகறி வகைகளுக்கு அப்பால் மேலதிகமாக மலைநாட்டு மரக்கறிவகைகளில் சிலவற்றை இம்முறை பரீட்சாத்தமாக மேற்கொண்டுள்ளோம் இது வெற்றியளித்துள்ளது. எதிர்காலத்தில் இவற்றை மேலும் விஸ்த்தரித்துச் செய்கைபண்ணலாம் என சிந்தித்துள்ளோம் அன அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.























SHARE

Author: verified_user

0 Comments: