19 Mar 2018

மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டுப் போட்டி

SHARE
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய உள்நாட்டலுவல்கள் அமைச்சின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (24) வெபர் மைதானத்தில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. 
உத்தியோகத்தர்களின் விளையாட்டு மற்றும் உடல் உள மேம்பாட்டுத் தேசிய வாரத்தினையொட்டியதாக நடத்தப்படும் இவ் விளையாட்டுப் போட்டியில் உத்தியோகத்தர்கள் பங்குகொள்ளும் வகையில் பாடும் மீன்கள், வாவி நாயகர்கள், நட்சத்திரப்படையினர், சூரியக்கதிர்கள் ஆகிய நான்கு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் காலை முதல் மாலை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டியில், கிரிக்கட், எல்லே, உதைபந்தாட்டம், கயிறு இழுத்தல், வாளியில் தண்ணீர் நிரப்புதல், பதகையால் நடத்தல், தகவல் பரிமாற்றம், தலையால் பந்து மாற்றல் என்பவற்றுடன் மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரையில் மேற்படி விளையாட்டு மற்றும் உடல் உள மேம்பாட்டுத் தேசிய வார விளையாட்டுப் போட்டிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE

Author: verified_user

0 Comments: