விளையாட்டு கழகங்கள் தமது ஊர் மற்றும் பிரதேசம் சார்ந்த சமூக சிந்தனையுடையவைகளாக மாற வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (02) குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. விளையாட்டு கழகங்கள் வெறுமனே விளையாட்டுக்களில் மாத்திரம் கவனம் செலுத்தாது ஊர் சார்ந்த, கல்வி, மற்றும் சுகாதாரம், சார்ந்த சமூக சேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அப்பிரதேசமானது சம அளவில் வளர்ச்சி அடைந்து செல்லும்.
கல்வியில் பாடசாலையை விட்டு பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தி அவர்களின் கல்வியினை மேம்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதற்கு உதவி வழங்க எமது அமைப்பு தயாராக உள்ளது. எமது அமைப்பினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் கல்விக்காக அதிகளவு ஒதுக்கீடுகளை நாம் மேற்கொள்கின்றோம். எனnவு விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் இப்பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment