இயற்கையை அழித்து இலத்திரனியலில் மோகம் ஏற்பட்டதால் பூமிப்பந்து பேராபத்தின் விளிம்பில் உள்ளது பற்றிய விழிப்புணர்வு கலாச்சார நிகழ்வும் நாட்டிய நாடகமும் மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியில் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.
கல்லூரி அதிபர் மரியான்தம்பி பற்ரிக் தலைமையில் அக்கல்லூரியின் 143வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திங்கட்கிழமை மாலை 19.03.2018 இடம்பெற்ற கல்லூரி தின நிகழ்வுகளில் போப்பாண்டவரின் இலங்கைக்கான பிரதிநிதி ஆயர் கலாநிதி பியரென் நுயன் வன் டொற்(Archbishop to SriLanka
Most Rev Dr Pierre Ngyuen Van Tot)மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜேசெப், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துஸித்த பனன்வல (Santhusitha Pananwala) மற்றும் படையதிகாரிகள், அடிகளார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment