தும்பங்கேணியில் அமைந்துள்ள அமுதசுரபி பால் பதனிடும் நிலையதின் செயற்பாடுளை மேலும் விருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மேற்படி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் தும்பங்கேணியில் அமைந்துள்ள அமுதசுரபி பால் பதனிடும் நிலையத்தில் பண்ணையாளர்களிடமிருந்து பல் கொள்வனவு செய்து தயிர், பால் டொபி, போன்ற உற்பத்திகள் செய்யப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் மேலும் அப்பகுதியிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்நிலையத்தின் தற்போதைய செயற்பாடுகள் பற்றி கலந்துரையாட்டப்பட்டன.
இதன்போது அப்பிரதேச கல்நடைவளர்ப்போர் கூட்டுறவுச்
சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம், கால்நடை வைத்திய அதிகாரி சி.ருசியந்தன், தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் தலைவரும் இருதைய சத்திர சிகிச்சை நிபுணருமான வைத்தியர் எஸ்.லிமலநாதன், அகிம்சா சமூக நிறுவனத்தின் ஆலேசகரும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் த.வசந்தராசா, மற்றும் கால் நடைபண்ணையாளர்களும், இதில் கலந்து கொண்டிருந்தனர்.
அமுதசுரபி பால் பதனிடும் நிலையதின் செயங்பாடுகளை மேலும் விஸ்த்தரிக்க திட்ட முன்மொழிவொன்றை வரைந்து அனுப்புமாறும், இதுபற்றி தாம் கவனத்தில் கொள்வதாகவும் இதன்போது கலந்து கொண்ட தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் தலைவரும் இருதைய சத்திரசிகிச்சை நிபுணருமான வைத்தியர் எஸ்.லிமலநாதன்,தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment