காத்தான்குடி பொலிஸ் பிரிவு புதிய காத்தான்குடி-06, நூராணியா பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பயனின்றி வியாழக்கிழமை 01.03.2018 மரணித்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி-03, தக்வா நகரை சேர்ந்த ஏ.எல்.ஏ.இன்னாம் (வயது 42) என்பவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணத்தைத் தழுவியுள்ளார்.
கடந்த செவ்வய்க்கிழமை இவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேரெதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவர் படுகாயமடைந்து முன்னதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் பற்றி காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment