19 Mar 2018

படுகொலை செய்யப்பட்ட நிலையில் யுவதியின் சடலம் புதருக்குள்

SHARE

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேச செயலகத்திற்கு மிகச் சமீபமாக உள்ள மதகும் புதர்களும் நிறைந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் காணப்படுவதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதென்று வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை 18.03.2018  நண்பகலளவில் கிரான் பிரதேச செயலகத்திற்குச் செல்லும் வீதியில் கிரான் பிரதேச செயலகத்திற்குச் சமீபமாக மதகு மற்றும் வாகை மரங்களடர்ந்த பகுதியில் இரத்தவாறாக இந்த யுவதியின் சடலம் கிடப்பது பற்றி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யுவதி மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் பார்த்து விட்டுத் திரும்பிருக்கலாம் என்றும் சடலத்தின் அருகே சூட்கேஸ் உள்ளிட்ட அவ்வாறான பொருட்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு உடற் கூறாய்வு பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: