மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட அனைகட்டியவெளி பிரதான வீதியில் காணப்படும் பாலம் மிக நீண்ட காலமாக பழுதடைந்து கிடப்பதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாத்திரமின்றி பிரயாணிகளும் மிகுந்த அவதியுற்று வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
நவகிரி கிளை ஆற்றுக்குகக் குறுக்காகக் போட்ப்பட்டுள்ள இப்பாலம் உடைந்தும், சிதைவடைந்தும், காணப்படுகின்றது. இவ்வீதியில் பயணம் செய்தும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலரும் உயிராபத்து மிகக் நிலையிலேயே தமது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இப்பாலத்தால் சென்ற ஆசிரியர் ஒருவர் சறுக்கி விழுந்து ஆற்றில் அள்ளுண்டுபோய் பரிதாபகரமான முறையில் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்தது.
காக்காச்சுவட்டை, பவாச்சோலை, ஆனைகட்டிகவெளி, சின்னவத்தை, மாலையர்கட்டு, மண்டூர், உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இவ்வீதியை தினமும் பயன்படுதி வருகின்றனர். இப்பாலம் அமையப்பெற்றுள்ள இவ்வீதியும் குண்றும் குழியுமாகக் காட்சிதரும் நிலையில் இவ்வீதியில் அமைந்துள்ள இப்பாலமம் முற்றாகச் சேதடைந்து நிலையில் உள்ளதனால் மக்கள் மிகுந்த போக்குவரத்துச் சிரமங்களi எதிர் கொண்டு வருகின்றனர்.
பாலத்தில் அமைந்துள்ள கற்கள் சிதைவடைந்து அதனுள் இருக்கின்ற கம்பிகள் வெளிந்த நிலையில்தான் அப்பகுதிவாழ் அதனையே மக்கள் பயன்படுதி வருகின்றனர். எனவே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகளும் இவ்வீதியை ஊடறுத்து பலமுறை சென்று வந்துள்ள நிலையிலும் இதன் புணரமைப்புக்குறித்து மிக நீண்ட காலமாக இருந்து இதுவரையில் யாரும் கருத்தில் கொள்ளாமலிருப்பது மிகுந்து கவலையளிப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றன. எனவே இவ்வருடத்திலாவது Nனைகட்டியவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள நவகிரி கிளை ஆற்றுக்குக் குறுக்காக இடப்பட்டுள்ள பாலத்தை புணரமைப்புச் செய்து மக்களின் இலகுவான போக்குவரத்திற்கு வழிசமைத்துத் தருமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு அப்பகுதிவாழ் பொதுமக்கள் உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாலங்கள் புதிகாக அமைக்கப்பட வேண்டியுள்ளன. கடந்த யுத்தகாலத்தில் பல பாலங்கள் உடைக்கப்பட்டுள்ளன. தற்போது நாம் மாவட்டத்தின் சில இடங்களில் புதிய பாலங்களை அமைத்து வருகின்றோம் அவற்றுள் சில வேலைத்திட்டங்கள் முடியும் தருவாயிலுள்ளன. மேலும் மாவட்டத்தில் 100 பாலங்கள் அமைப்பதற்கு உரிய திட்ட முன்மொழிவுகளை சம்மந்தப்பட்ட அமைச்சிக்கு அனுப்பியுள்ளோம். அதில ஆனைகட்டியவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள நவகிரியாற்றுக்குக் குறுக்காக இடப்பட்டுள்ள பாலமும் அடங்கியுள்ளது. எனவே அவற்றுக்குரிய அனுமதிகள், நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றதும் இவற்றின் நிருமாணப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என இவ்விடையம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசனிடம் செவ்வாய்க்கிழமை (13) தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment