மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட எருவில் கிழக்கு கிராமத்தில் பல குடும்பங்கள் நிரந்தர வீடுகளின்றி ஒலைக்குடிசைகளில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்தில் 672 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், 46 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒலைக் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் 142 இற்கு மேற்பட்ட குடும்பங்களுகள் அரைவாசி நிரந்தர வீடுகளிலும் வசித்து வருவதாக அக்கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றர்.
எருவில் கிழக்கு கிராமத்தில் 23 இற்கு மேற்பட்ட அங்கவீனர்களும். 125 மேற்பட்ட விதவைகளும் காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் அக்கிராமத்தில் ஓலைக் குடிசையில் மண் தரையில் பச்சிழங் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் தமக்கு ஓர் சிறிய அளவிலான நிரந்தர கல்வீடுகளையாவது அமைத்துத்தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தாழ் நிலமாகக் காணப்படும் இப்பகுதி மழை காலத்தில் வெள்ளக்காடாகக் காட்சிதரும்., அவ்வாறாக சூழ்நிலையில் இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தஞ்சமடைவதும் வழக்கமாகவுள்ளது.
எனவே அரசாங்கம் ஏனையயோருக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து உதவுவதுபோல் தம்மையும் கவனித்து எமது குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க தமக்கு வீடமைப்பு வசதியினை ஏற்படுத்தித்தருமாறு வேண்டுகின்றோம் என எருவில் கிழக்கு கிராம மக்கள் தமது அங்கலாய்ப்புக்களைத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இக்கிராமத்தில் 10 பிள்ளைகளுடன் சிறிய குடிசை வீட்டில் வசித்து வரும் ஒரு குடும்பத்திற்கு மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் அஹிம்சா எனும் சமூக தன்னார்வ தொண்டு நிறுவனம் சிறிய அளவிலாள கல்வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு முன்வந்து அதற்குரிய வேலைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment