(சினாஸ்)
மருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றில் பெயின்ட் பூச மாடிவீட்டின் உயரத்திற்கு ஏறிய ஒருவர் சனிக்கிழமை (10) தவறுதலாக கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிளந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
மருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றில் பெயின்ட் பூச வேலைக்கு வந்த பாண்டிருப்பு-02 ஐ சேர்ந்த ஆறுமுகம் தயாபரன் (வயது 56) என்பவர் பெயின்ட் பூசிக் கொண்டிருந்த போது தவறுதலாக உயரத்திலிருந்து கீழே விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பற்ற முறையில் மாடி வீட்டின் உயரத்தில் நின்று கொண்டு வேலை செய்தமையாலயே இந்த பரிதாபகரமான விபத்து நேர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.
சம்பவ இடத்துக்கு வருகைதந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் பிரேத பரிசோதனை செய்வதற்காக சம்மாந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment