மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள், தொழிலகங்கள், சிறிய நடுத்தர மற்றும் பெரிய கடைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு சட்டபூர்வ முத்திரை இடும் பணிகள் புதன்கிழமை 14.03.2018 தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் ஏ.எல். நௌஷாத் (Dept.
of Measurements unit Standards and Services District Laboratory)தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் சுமார் 1000 இற்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், தொழிலகங்கள், சிறிய நடுத்த மற்றும் பெரிய கடைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பயன்படுத்தப்படும் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு சட்டபூர்வ முத்திரை இடும் பணிகள் இம்மாதம் 28ஆம் திகதிவரை இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏறாவூர் புன்னைக்குடா வீதியிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அலுவலக வளாகத்திற்குள் வார நாட்களில் அலுவலக நேரங்களில் குறிப்பிட்ட காலப் பகுதியில் இந்தப் பணிகள் தினந்தோறும் இடம்பெறும்.
இக்காலப் பகுதியில் தம்வசமுள்ள நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு சட்டபூர்வ முத்திரை இட்டுக் கொள்வதோடு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுமாறு வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வியாபாரிகளும் அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment