வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 350 பொலிஸார் நாட்டின் இதர பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜே. ஜாகொட ஆராச்சி புதன்கிழமை 28.02..2018 தெரிவித்தார்.
ஜனவரி மாத ஆரம்பம் தொடக்கம் இந்த வருடாந்த இடமாற்றம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் நடைபெற்று முடிந்து உள்ளுராட்சித் தேர்தல் காரணமாக இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்ததன் பின்னர் இந்த இடமாற்றம் தற்போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த வார இறுதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நகரப் பிரதேசங்களான மட்டக்களப்பு நகரம், ஏறாவூர், வாழைச்சேனை, காத்தான்குடி உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய சுமார் 350 இற்கு மேற்பட்ட பொலிஸார் வழமையான இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆண் பெண் அதிகாரிகளான பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் சார்ஜன்ற், பொலிஸ் உத்தியோகத்தர்கள் வரை இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் இதர பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய அதே எண்ணிகையிலான பொலிஸார் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment