மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் மோட்டர் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 33 வயதுடைய ந.யோகம்பரநாதன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment