கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் இறுத்திக்கட்ட தேர்தல் பிரச்சாரமும் களூவளையில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கருணா அம்மான்….
தலைவர் பிரபாகரனை நானும் எனது அண்ணனும் பலமுறை காப்பாற்றியுள்ளோம். 18 பேருடன் மணலாற்றுக் காட்டுக்குள் வந்து நின்ற தலைவரை எனது அண்ணனும் நானும் 40 பேருடன் சென்று சண்டை செய்து தலைவரைக் காப்பாற்றினோம் அதுபோல் ஜெயசிக்குறுச் சமரிலும் சண்டை செய்து காப்பாற்றினோம்.
இவ்வாறு பலமுறை நான் தலைவரைக் காப்பாற்றியுள்ளேன். இறுதியில் எனது கருத்தை தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை இதன் காரணமாகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிந்தார்கள். எனது கருத்தை தலைவர் பிரபாகரன் ஏற்றுக் கொண்டிருந்தால் நிலமை இந்த அளவிற்கு வந்திருக்க மாட்டாது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment