வீட்டில் சமைத்த உணவு நஞ்சாகியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 20.02.2018 இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, புதிய காத்தான்குடி 3இல் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமது இரவு உணவை உட்கொண்டபோது மயக்கமுற்ற நிலையில் முன்னதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்கள் சமைத்த உணவில் மீனின் பாகங்களைக் கொண்ட கறி உட்பட ஏனைய உணவுகளும் பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதார அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்றன.
0 Comments:
Post a Comment