நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுதாவளையிலுள்ள 2 வட்டாரங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் களுதாவளை வடக்கு வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட எம்.தேவதாஸ் 1014 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட குவிராஸ் 709 வாக்குகளைப் பெற்றுள்ளர்.
இந்நிலையில் களுதாவளை தெற்கு வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஞா.யோகநாதன் 1230 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் இந்த வாட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் கோட்டியிட்ட திருநாவுக்கரசு 583 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
0 Comments:
Post a Comment