13 Jan 2018

மட்டக்களப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய பொங்கல் விழா

SHARE
தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பு கொத்துக்களம் மாரியம்மன் தேவஸ்தானத்தில் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 
வருடம் தோறும் நடத்தப்படும் சமய விழாக்களின் வரிசையில் இம்முறை பொங்கல் விழா மட்டக்களப்பில் கொண்டாடப்படுகிறது. 

இவ் விழாவில் பங்கு பெறவும் கலாசார சமூக பரிமாற்றத்திற்குமாகவும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 300 இளைஞர் யுவதிகள் வருகை தரவுள்ளனர்.  

பொங்கல் விழா நிகழ்வொழுங்கில்,  நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து வருகைதரும் இளைஞர் யுவதிகள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் ஊறணியில் வைத்து வரவேற்கப்பட்டு பின்னர் வீடுகளுக்கு தங்க வைக்கப்படுவர். 

17 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு பொங்கல் விழா ஆரம்பமாகவுள்ளது. 

பொங்கல் நிகழ்வினை அடுத்து, காலை 8 மணிமுதல் கலாசார பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று மதிய உணவினையடுத்து மாலை நிகழ்வுகள் நடைபெற்று பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

இறுதி நிகழ்வுக்கு பிரதி, இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். 

மாவட்ட செயலகமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்தும் இவ் பாரம்பரிய பொங்கல் விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: