தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அண்மைக் காலமாக வியாபாரங்கள் களை கட்டியிருந்தன. இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தப் பகுதியில் அதிகளவு பொதுமக்கள் பொருட் கொள்வனவுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை 7 மணியளவில் வேன் ஒற்றில் களுவாஞ்சிகுடி சந்தைப் பகுதிக்கு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி சுமணரெத்தின அம்பிட்டிய தேரர் உள்ளிட்ட குழுவினர் வந்திறங்கி அகிருந்த வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் சகஜமா அளவலாவினர்.
பின்னர் தேங்காய் கடை ஒன்றிற்குச் சென்று பணம் செலுத்தி அரை மூடை தேங்காய்களை வாங்கிக் கொண்டு சென்றனர்.
மங்களராம விகாராதிபதி சுமணரெத்தின தேரர் கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னிச்சையான பல செயற்பாடகளை மேற் கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment