ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவின் உன்னிச்சை - கார்மலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் 11.01.2018 காட்டு யானைத் தாக்குதலினால் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் ஐயன்கேணி கிராமத்தைச் சேர்ந்த மாலையர் சின்னத்தம்பி (வயது 50) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
இவர் மாடுகளைப் பராமரிப்தற்காக பொருட்களை வாங்கிக் கொண்டு அப்பகுதிக்குச் சென்றபோது காடுகளுக்குள் இருந்து வந்த யானைகளில் ஒன்று தாக்கியதில் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment