தலைவர் பிரபாகரனும் பொட்டு அம்மானும் சேர்ந்து எம்மிடமும் கேட்காமல் இந்தியத் தலைவர் ராயுக்காந்தியைக் கொலை செய்துவிட்டார்கள். அதன் பின்னர்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என இந்தியா முடிவெடுத்தது.
என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகளிள் இயக்கத்தின் முன்னாள் தளபதியுமாயிருந்த கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு களுதாவளை வடக்கு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து சனிக்கிழமை (27) இரவு களுதாவளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் கணேசமூர்த்தி என்பவர் போட்டியிட்டு அமீரலியை அமைச்சாராக்கிவிட்டு தற்போது அவர் அமீரலியின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிகின்றார். அதுமாத்திரமின்றி களுதாவளை நடு ஊரினுள் முஸ்லிம்களைக் கொண்டு இருத்தவும் அவர் திட்டம் தீட்டியுள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கு உதவுதல், வடக்கு கிழக்கிலே உள்ள 800000 இற்கு மேற்பட்ட விதவைகளுக்கு உதவுதல், முஸ்லிம் அரசியல் தலைவர்களின் திமிரை அடக்குதல் போன்ற பல காரணங்களுக்காகத்தான் நாம் ஓர் தனித் தமிழ்க் கட்சி ஆரம்பித்து செயற்பட்டு வருகின்றோம். வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும், ஓட்டமாவடியில் அமைந்துள்ள இந்துக்கோயிலை இடித்துவிட்டு பள்ளிவாசலைக் கட்டினேன், அதற்காகத்தான் அங்கிருந்த தமிழ் நீதிபதியை மாற்றினேன், என்றெல்லாம் அமைச்சர் ஹில்புல்லா தெரிவிக்கின்றார்.
வெறும் 7 ஆசனங்களை எடுத்து கிழக்கு மாகாணத்தை ஆட்டிப்படைந்த நாங்கள் என ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார், ரிதிதென்னையில் அரபுக்கல்லூரி கட்டப்படுகின்றது, இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தட்டிக் கேட்காமால் நித்திரை கொள்கின்றார்கள். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹபீஸ்; நஸீர் அமகட் ஒரு கோடீஸ்வரர் அவர் காசை அள்ளி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கக் கொடுத்தவுடன் அவரிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு அவருக்குப் பின்னாலே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போய் பிட்டனர். 4500 இற்கு மேற்பட்ட முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹபீஸ்; நஸீர் அகட் தொழில் வாய்ப்பு வழங்கியுள்ளார் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களெல்லாம் தற்போது அதிகளவு முஸ்லிம்கள்தான் கடமை புரிகின்றார்கள். இவைகளைத் தட்டிக்கேட்பதற்கு நாம் சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும். இதற்காகத்தான் எமது கட்சியும் செயற்பட்டு வருகின்றது.
இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் வெற்றியானது எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்தி ஒரு தமிழனை முதலமைச்சராக்குவதற்கு வழிவகுக்கும். இதற்காக வேண்டித்தான் நான் இரவு பகலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன். பிள்ளையானை முதலமைச்சராக்கியது நான்தான். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எனக்கு வழங்கப்பட்ட வாக்கைக் காப்பாற்றுவதற்காகத்தான் கிழக்கில் 4 ஆசனங்களைப் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
யுத்தம் நிறுத்தப்பட்டதனால்தான் நமது இளைஞர்கள் எல்லாம் தற்போது உயிருடன் இருக்கின்றார்கள். கருணா அம்மான் தற்போது வரை யுத்தம் செய்திருந்தால் வென்றும் இருக்க முடியாது, தோற்றும் இருக்க முடியாது. இன்றுவரை யுத்தம் இநடைபெற்றிருக்கும் அழிவுகள்தான் இடம்பெற்றிருக்கும்.
27 நாள் தொடர்ச்சியாக சண்டை செய்த யாழ்ப்பாண போராளிகளால் ஆணையிறவைப் பிடிக்க முடியாமல் போய்விட்டது. தலைவர் பிரபாகரன் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மட்டக்களப்பு போராளிகள் அங்கு சென்று போராடி 24 மணித்தியாலத்தில் நாம் ஆனையிறவைக் கைப்பற்றியிருந்தோம். இக்காலகட்டத்தில் எமது யுத்தத்தைக் கண்டு சிங்கள அரசு திணறிப் போய்விட்டது. அதன் பின்னர்தான் பேச்சுவார்த்தை வந்தது.
நாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் விடுதலைப் போராளிகளாகவே இணைந்தோம் பின்னர் நாம் பயங்கரவாதிகளாக மாறிவிட்டோம். ஏனெனில் இங்குவந்த இந்தியப்படையை நாம் அடித்து விரட்டினோம், அதன் பின்னர் தலைவர் பிரபாகரனும் பொட்டு அம்மானும் சேர்ந்து எம்மிடமும் கேட்காமல் இந்தியத்தலைவர் ராயுக்காந்தியைக் கொலை செய்து விட்டார்கள். அதன் பின்னர்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என இந்தியா முடிவெடுத்தது. இந்நிலையில் எம்மை வளர்த்தது இந்தியாதான் அங்குதான் நானெல்லாம் பயிற்சிகளைப் பெற்றேன். தொடர்ந்து 24 நாடுகள் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என தடைசெய்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தல 2 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அக்கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றிருக்கின்ற சிவசக்தி ஆனந்தன் எனும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். ஆனால் நான் பிரதியமைச்சராகவும் இருந்துள்ளேன் எவரிடமும் காசுவாங்கவில்லை. இனிமேலும் வாங்கப்போவதுமில்லை. என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment