3 Jan 2018

மக்கள் சேவையே மகேசன் சேவையென கிராமத்திற்காக என்னை அற்பணித்து செயற்பட்டுள்ளேன் ஐ.தே.க. வேட்பாளர் வாமதேவன்.

SHARE
களுவாஞ்சிகுடி கிராமத்தில் எனது சேவையானது பல தசாப்தங்களை கடந்து வந்தது. மக்கள் சேவையே மகேசன் சேவையென கிராமத்திற்காக என்னை அற்பணித்து செயற்பட்டுள்ளேன். என களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் ஐக்கியதேசிய கட்சி சார்பாக போட்டியிடும் முன்னாள் கிராமத்தலைவரும் சமாதான நீதவானுமாகிய மு.வமதேவன் தெரிவித்தார்.
தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் புதன் கிழமை (03) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அவர இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போதே அவர் மேலும் தெரிவிக்கையில்….. 

நான் பல காலமாக களுவாஞ்சிகுடியின் கிராமத்தலைவராக, கிராம அபிவிருத்திச் சங்க தலைவராக, கலை கலா மன்றங்களின் தலைவராக இருந்து மக்களுக்கு மிகவும் அற்பணிப்புடன் சேவையாற்றி வந்துள்ளேன். இச்சேவையை நான் தொடர்வதற்கு மக்களின் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைவாக இம்முறை உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக களம் இறங்கியுள்ளளேன். 

எனது வெற்றிக்கு மக்கள் மிகவும் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்டு வருகின்றனர். எனது வெற்றியானது நிற்சயமானது, இந்த வெற்றியின் பிற்பாடு எனது சேவையானது விரிவடையும். அதாவது மக்களின் அடிப்படை அபிவிருத்திகளான வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி மின்சாரம், விளையாட்டு, போன்ற இன்னோரன்ன தேவைகளை கண்டறிந்து உள்ளுராட்சி மன்றத்தின் ஊடாக நல்லாட்சி அரசாங்கததின் உதவியுடன் மேற்கொள்வேன்.

இதுவே எனது நோக்கமாகும். எமது கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் உதவியுடன் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருடன் இணைந்து நாங்கள் பட்டிருப்பு தொகுதி பூராக அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது அவாவாகும். காரணம் கடந்த காலங்களில் நாங்கள் பலதரப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்து கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் மிகவும் வீழ்ச்சிகண்டுள்ளோம்.

இவற்றினை சரி செய்வதாயின் இந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலை நாங்கள் சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் நாங்கள் கூடுதலான வளங்களை பெற்று அபிவிருத்தி காணலாம் என அவர் இதன்போது தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: