தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமது பட்டிருப்புத் தொகுதியை ஒரு அனாதையாக விட்டு விட்டுச் சென்றுள்ளார்கள். இது இங்குள்ள மக்களின் மனத்தில் ஒரு வேதனையான விடையமாகத் தென்பட்டுள்ளது. அதனால்தான் நனும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டு இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.
என ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் போட்டியிடும், முன்னாள் கிராமத் தலைவர் மு.வாமதேவன் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை (06) இரவு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் இதன்போது குறிப்பிடுகையில்….
கடந்த காலத்திலிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பட்டிருப்புத் தொகுதியில் ஒரு பிரதான கிளைக்காரியாலயம் அமைத்து அவற்றிலிருந்து இத்தொகுதி மக்களின் தேவைகளையறிந்து செயல்பட வேண்டும் என நாம் அவர்களிடம் கோரியிருந்தோம். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமது பட்டிருப்புத் தொகுதியை ஒரு அனாதையாக விட்டு விட்டுச் சென்றுள்ளார்கள். இது இங்குள்ள மக்களின் மனத்தில் ஒரு வேதனையான விடையமாகத் தென்பட்டுள்ளது. அதனால் நனும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டு இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.
தற்போதைய நல்லாட்சியின் காலத்தில் எமக்குத் தேவையானது அபிவிருத்தியாகும், எமது பகுதியில் பல இளைஞர் யுவதிகள் இன்றுவரை எதுவித தொழில் வாய்ப்புக்களுமின்றியிருக்ன்றார்கள். நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் நல்லாட்சி அரசைப் பயன்படுத்தி எமது பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து, பல தொழில் வாய்ப்புக்களையும் மேற்கொள்வோம்.
சமூகத்தில் பல பதவிகளை வகித்து வந்த எமக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கவில்லை, அதுமாத்திரமின்றி அவர்கள் மக்களுக்குக் கூறிவிட்டுச் சென்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தேர்தல் காலத்தில் மாத்திரம் வந்து வாக்குகளைப் பெற்றுவிட்டு, அவர்கள் எங்களைப் பாரமுகமாக இருக்கின்றார்கள்.
கடந்த காலத்தில் பட்டிருப்புத் தொகுதி மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் அதிகப்படியான வாக்குக்களை வழங்கியிருந்தோம். ஆனால் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்த்த அளவிற்கு எமக்கு நன்மை கிடைக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலத்திலிருந்து நிதானமாகச் சிந்தித்து செயற்பட்டிருந்தால் பட்டிருப்புத் தொகுதி நடாளுமன்றப் பிரதிநிதித்துவம் அற்ற தொகுதியாக தற்போது இருந்திருக்காது. என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment