தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற குழுக்ககளின் பிரதி தலைவர் பதவியினை தமிழ்த் ஏற்றுக்கொண்டுள்ளது, என்றால் ஏன் அமைச்சு பதவியினை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்ய முடியாது, அமைச்சு பதவிக்கு பிரதித் தலைவர் பதவிக்கும் என்ன வித்தியாசம் என பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலினை முன்னிட்டு களுவாஞ்சிகுடியில் திங்கட் கிழமை மாலை கட்சி காரியலாத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
இந்த நாடு முன்னைய ஆட்சி காலத்தில் ஜனநாயம் ஒழிக்கப்பட்ட நாடாக காணப்பட்டது. ஆனால் ஜக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த பிற்பாடு பலதரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவி ஜனநாயகத்தை நிறுவித்து காட்டியுள்ளது. அந்த வகையில் தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலானது இலங்கையில் சுயாதீனமாக அமைக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் முதலாவது தேர்தலாகும் எந்த வித அரசியல் தலையீடுகள் இன்றி தேர்தலானது சுதந்திரமாக நடாத்தப்படவுள்ளதனை நீங்கள் அறீர்கள். அதனை விட எமது மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து காணமால் ஆக்கப்பட்டவர்களுக்கு அலுவலகம் ஒன்றினை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தகவல் அறியும் சட்டம் நடைமுறையில் உள்ளது அனைத்து தகவல்களையும் சாதாரண மக்களும் பெற்றுக்கொள்ள முடியும். இவை அனைத்தும் ஒரு ஜனநாயக நாட்டின் பண்புகளேயாகும்.
இன்று தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று தேவையாகவுள்ளது. இதனை நான் எற்றுக்கொள்கின்றேன். அதனை பெற்றுக் கொள்வதற்கு ஒரு கட்சி தேவையா? அந்த கட்சி என்ன செய்கின்றது. கடந்த தேர்தலில் தமிழ்த தேசியக் கூட்டமைப்பினர் வடகிழக்கு மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களிக்கும்படி கோரியதுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவினையும் வழங்கியிருந்தனர். ஆனால் முஸ்லிம் காங்கரஸ் மக்களுக்குள்ள தேவைகளை முன்வைத்து தனது நிபந்தனையுடன் கூடிய ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தது. எனவே தமிழத்தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்பதனை அன்றே ஏற்றுக்கொண்டுள்ளது.
மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியமைத்த பொழுது பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது. ஆனால் அமைச்சு பதவியினை பெற்றுக்கொள்ள மறுத்தது பாராளுமன்ற குழுக்களின் பிரதிதலைவர் பதவிக்கும் அமைச்சு பதவிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. அதனைவிட அமைச்சு பதவியினை ஏற்றிருந்தால் பலதரப்பட்ட அழிவுகளை சந்தித்த மக்களுக்கு ஏதாவது செய்திருக்க முடியும் அல்லவா?
ஆரசாங்கத்திடம் பதவியை பெற்ற இவர்கள்! மாறாக மக்களிடம் கட்சி ஐக்கிய தேசிய சிங்கள கட்சியாகும் அதற்கு வாக்களிக்வேண்டாம். அக்கட்சிக்கு அளிக்கும் வாக்கு முஸ்லிம்களுக்கு சென்றுவிடும் என்ற வாதத்தினை முன்வைத்து வருகின்றனர். கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் மக்களின் ஏகோபித்த அதிகூடிய வாக்குகளைப்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளை முஸ்லிம் காங்கரசுக்கு அடகுவைக்கவில்லையா? நீங்கள் எவ்வாறு இனத்தை பற்றி பேசமுடியும் அவ்வாறு பேசுவதில் என்ன நியாம் உள்ளது. மக்களை ஒருபோதும் ஏமாற்ற வேண்டாம். அன்பார்ந்த மக்களே தீர்வு என்று ஒன்று வரும்போது அது இந்த நாட்டில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் அனைத்து மக்களுக்கும் சமமானதாவே கிடைக்கும் இதற்கா நீங்கள் வருந்த்த தேவையில்லை அது அனைத்து கட்சிகளின் சம்மத்துடன்தான் நடக்கும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment