16 Jan 2018

மாணவர்களை சமுகத்திற்கு நற்பிரஜையாக தருவதே எமதுபணி. அதிபர் - புட்கரன்.

SHARE
எம்மிடம் பெற்றோர்கள் ஒப்படைத்த பிள்ளைகள் அனைவரும் எமது பிள்ளைகள். அவர்களை நற்பிரஜைகளாக சமுகத்திற்கு தருவதே எமதுபணி என திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலய அதிபர் ஆ.புட்கரன் தெரிவித்தார்.
திங்கட் கிழமை (15) நடைபெற்ற தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு மேலும் அதிபர்….
தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது மாணவர்களை பாடசாலையை விரும்புவதற்காகவே மேற்கொள்ளப் படுகின்றது. இன்றிலிருந்து எம்மிடம் ஒப்படைக்கப்படும் தரம் 01 மாணவர்கள் அனைவரும் எமது மாணவர்கள் தான். அவர்களை சரியானமுறையில் நெறிப்படுத்தி, வளப்படுத்தி சமூகத்திற்கு வழங்குவது ஆசிரியர்களாகிய எமது கடமையாகும். 

ஆரம்பப் பிரிவு பாடசாலை என்றால் பெற்றோர்களின் கவனம் அதிகமாயிருக்கும். இந்தப் பிள்ளைகளை எம்மிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்திருக்கின்றீர்கள் அவர்களை நெறிப்படுத்த ஆற்றலும் நோக்கமும் கொண்டவர்களாக எமது ஆசிரியர் குழாம் இருக்கின்றார்கள். இதனை; பெற்றோர்கள்  திடமான நம்பிக்கையும், உறுதியையும் கொள்ள வேண்டும்.

இந்தப்பாடசாலையூடாக நாம் காட்டக்கூடிய அடைவ மட்டம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுதான். அதனை கடந்த வருடம் சிறப்பாக காட்டியிருந்தோம். அதேபோன்று இந்த மாணவர்களையும் அப்பரீட்சைக்கு தேர்ந்தவர்களாக மாற்ற வேண்டும். இவையனைத்துக்கும் பெற்றோர்களும், ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும் எனவும் தெரவித்தார்.  







SHARE

Author: verified_user

0 Comments: