3 Jan 2018

குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என திருப்பழுகாமம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை தமது குடியிருப்புக்களுக்கு அருகில் கொட்ட வேண்டாம் எனக்கோரி திருப்பழுகாமம் பொதுமக்கள் புதன்கிழமை (03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…. 

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையினால் அப்பிரதேசம் பூராகவும் சேகரிக்கப்படும் உக்கும் மற்றும் உக்காத கழிவுகள் அனைத்தும் திருப்பழுகாமம் வள்ளுவர் மேடு எனும் பகுதியில் அமைந்துள்ள தீவுச்சேனை எனும் இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியிலுள்ள நீர் நிலைகள், அருகிலுள்ள மட்டக்களப்பு வாவி, குளங்கள், மற்றும் விவசாய நிலங்கள் என்பன பாதிப்படைந்து வருவதாகவும், கழிவுகளை காகம், நாய் போன்றன எடுத்துச் சென்று தமது குடியிருப்புக்களுக்குள்ளும், குடிநீர் கிணறுகளுக்குள்ளும் போட்டுச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்துதான் இவ்விடத்தில் பிரதேச சபையினால் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. அதிலும் உக்கக்கூடிய கழிவுகளையும், உக்காத கழிவுகளையும், ஒன்றாகச் சோர்த்து கொட்டப்பட்டு வருவதனால் அப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள், மற்றும் கால்நடைகளும் நடமாட முடியாத சூழல் காணப்படுகின்றது. எனவே இன்றிலிருந்து இவ்விடத்தில் எதுவித கழிவுகளையும், பிரதேசசபை கொட்டக்ககூடாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்த குறித்த கழிவுகள் கொட்டப்படும் இடத்திற்கு விரைந்த போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் அ.ஆத்தித்தன் மக்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு இவ்விடத்தில் கழிவுகளைக் கொட்டுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு மக்கள் அதற்கு சம்மத்திக்கவில்லை.

இதுவரைக்கும் இவ்விடத்தில் கழிவுகள் கொண்ட வேண்டாம் இதனால் எமது சூழல் பாதிப்படைந்து வருகின்றது எனக்கோரி பல கோரிக்கைகளையும் தாம் முன்வைத்திருந்த போதிலும் இதுவரையில் பாராமுகமாக அதிகாரிகள் இருந்துள்ளார்கள். எனவே அதனை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இறுதியில் கழிவுககளை ஏற்றிக் கொண்டு வதந்த இரண்டு வாகனங்களும் மக்களளால் திருப்பி அனுப்பப்பட்டதோடு, வழமையாக குப்பைகளைக் கொட்டி வந்த செயற்பட்டை மக்கள் இன்று (03) தடுத்ததன் காணரமாக திருப்பழுகாமத்திலுள்ள 6 கிராமசேவைகர் பிரிவு, முனைத்தீவு, பெரியபோரதீவு, ஆகிய கிராமங்களிலிருந்தும் கழிவுகளைச் சேகரிப்பதை தற்காலிகமாகத் தடை செய்துள்ளோம், வியாழக்கிழமை (04) நாம் அதிகாரிகள் மட்டத்தில் கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளோம் என போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் அ.ஆதித்தன் இதன்போது தெரிவித்தார். இதன்பின்னர் ஆர்பபாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

குறித்த இடத்தில் உக்கக்கூடிய கழிவுகளைப் பயன்படுத்தி கூட்டுப்பசளை தயாரிப்பதற்கு 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர், போரதீவுப்பற்று பிரதேச சபையை செயற்படுத்திய அரசியல் வாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டம் அவ்விடத்தில் தூர்ந்து போய் கிடைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
























SHARE

Author: verified_user

0 Comments: