4 Jan 2018

மாமரங்களை நடுகைசெய்தலும், கத்தரித்தலும் விவசாயிகளுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு.

SHARE
மாமரங்களை நடுகை செய்தலும், கத்தரித்தலும், பழக்கப் படுத்தலும், பழுக்கவைத்தலும் உரம் இடலும், மாவிலைத் தத்திகளைக் கட்டுப்படுத்துவதற்குமான ஒருங்கிணைந்த தொழிநுட்ப விழிப்பூட்டல் நிகழ்வொன்று  இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது போரதீவுப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட திக்கோடை விவசாயப் போதனாசிரியர் பிரிவின் தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டம் எனும் கிராமத்தில் மாவட்ட பிரதிவிவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சிவஞானம் அவர்களின் ஒத்துழைப்புடன் திக்கோடை விவசாயப் போதனாசிரியர் ந.விவேகானந்தராஜாவின் ஒழுங்குபடுத்தலுடன் இவ்விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி மட்டக்களப்பு தெற்குவலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சிவஞானம் மற்றும் கிராம சேவையாளர், பாடவிதான உத்தியோகஸ்தர்கள், மதகுரு, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், சமூர்த்தி உத்தியோகஸ்தர், பாடசாலை அதிபர் உட்பட இருநூறிற்கு மேற்பட்ட விவசாயிகளும் இதன்போது கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர், மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் ஆகியோரால் சம்பிரதாய பூர்வமாக விவசாயிகளுக்கு விவிசாய் விளக்கங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் மாமரக்கன்றுகளும் நடுகைசெய்யப்பட்டன. பின்னர் அனைத்துத் தொழிநுட்ப விடயங்களுக்குமான செயன்முறைகளும், விரிவான விளக்கங்களும் விவசாயப் போதனாசிரியர்களால் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

இப் பகுதியில் அதிகளவான மாமரங்கள் இருக்கின்றன இவை பராமரிக்கப்படாமல் இருப்பதனால் விளைச்சல் குறைவாக இருக்கின்றன, இவற்றை உரியமுறையில் பராமரித்து, கத்தரித்து, உரமிட்டால் எதிர்காலத்தில் விளைச்சலை அதிகரிக்கும். இங்கு வயதான நல்ல இயல்புடைய மாரமரங்கள் இருப்பதனால் இவற்றைப் புதுப்பிக்கும் வகையில் வன்கத்தரித்தல் செய்ய வேண்டும். என இதன்போது விவசாயப் போதனாசிரியர் ந.விவேகானந்தராஜா விளக்கமளித்தார்.

இதன்போது கலந்து கொண்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் இப்பகுதிக்கு பொருத்தமான தலைப்பிலே நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் இக்கிராமம் உலக வங்கியின் நவீனமயமாக்கப்பட்ட 5 ஆண்டு விவசாய அபிவிருத் திதிட்டத்தில் உள்வாங்கப்பட்டு உள்ளக அபிவிருத்தி மற்றும் விவசாய அபிவிருத்தி போன்றவற்றிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதையிட்டுள்ளன. இதனை இக்கிராம மக்கள் அனைவரும் பாக்கியசாலிகள் எனவும், இத்திட்டத்தின் மூலம் இக் கிராமம் மேலும் சுபீட்சம் அடையும் எனவும் தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: