10 Jan 2018

காட்டு யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பரீட்சாத்தமாக தேனி வளர்ப்புத்திட்டம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் காடுட்டு யானைகளின் தாக்கங்களும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இருந்த போதிலும், காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உட்புகாமலிருக்க ஆபிரிக்க நாடுகளில் யானைகள் வரும் வழியில் வரிசையாக உயர்ந்த பனைமரங்களை வளர்த்தல், முட்கள்ளிமரங்களை நடுதல், மற்றும் தேனி வளர்த்தல் போன்ற பல செயற்பாடுளை  மேற்கொள்கின்றனர்.
இவற்றுள் ஒரு பரிட்சாத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தின், போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் காட்டு யானைகள் அதிகம் ஊடுருவும்  கிராமமான யானைகட்டியவெளி எனும் கிராமத்தில் அடிக்கடி யானைகள் வரும் இடத்தை மக்களுடாக அடையாளப்படுத்தி அப்குதியில் 500 மீற்றர் தூரத்திற்கு கேபிள் கம்பி பொருத்தி அதில் 20 மீற்றர் இடைவெளியில் தூண்கள் அமைத்து அதிலே சிறிய நிழல்பந்தலிட்டு, அவற்றினுள், தேன் கூட்டு பெட்டிகளைப் பொருத்தும் செயற்பாட்டில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்துள்ளது.

இதற்குரிய இடத்தினை யானைகட்டியவெளி கிராமத்து கிராமசேவை உத்தியோகஸ்த்தர், மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்து செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் செவ்வாய்க் கிழமை (09) பார்வையிட்டு மக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்தனர்.

இந்த செயற்றிட்டதினூடான இரண்டு விதமாக யானைகளைக் கட்டுப்படுத்தலாம். ஒன்று தேன் பூச்சுகளின் இங்… இங்… இங்…. என்ற ஒரு வித இரைச்சல் யானைகளின் காதுகளுக்குப் பொருந்தாது இதனால் வரும் யானை திரும்பிச் செல்லும். இரண்டாவது யானை குறிப்பிட்ட 500 மீற்றர்தூர இடைவெளியில் ஏதாவது ஒரு இடத்தினால் கடக்க முற்படும் வேளையில் யனையின் உடம்பு அந்த கேபிள்கம்பியில் பட்டவுடன் அனைத்து தேன்கூடுகளும் அசைந்து தேன்பூச்சுக்கள் யானைகளைத் தாக்கும்;. இதனால யானை மிரண்டு திருப்பி ஓடிவிடும். இந்த இரண்டு செயற்பாடுகளினாலும் யானைகள் கிராமத்திற்குள் வருவது நிறுத்தப்படும். என நம்பப்படுகின்றன.

இச் செயற்றிட்டத்தினால் யானைகட்டியவெளி கிராமத்திலுள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒரு அங்கத்தவர் வீதம் 20 நபர்களைத் தெரிவு செய்து குறித்த தேன் கூடுகளைப் பராமரிக்கும் பெறுப்பு அவர்களிடத்தில் வழங்கப்படும், குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை சுத்தமான தேனையும் அவர்கள் அதிலிருந்து பெற்று அவர்கள் வருமானத்தையும் ஈட்டமுடியும். இதற்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் துறைசார்ந்தவர்களைக் கொண்டு வழங்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை திட்டமிட்டுள்ளது.

இச்சொயற்பாடு ஆபிரிக்க நாடுகளில் வெற்றியளித்துள்ள நிலையில். இலங்கையில் முதன்முதலாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள யானைகட்டியவெளி எனும் கிராமத்தில்தான் இம்மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இச்செயற்பாட்டினால் குறிப்பிட்ட பகுதிக்குள் காட்டுயானைகள் ஊடுருவாமலிருந்து இது வெற்றியித்தால் இச்செயற்றிட்டத்தை மேலும் விஸ்த்தரிக்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.









SHARE

Author: verified_user

0 Comments: